வலைதளத்தில் காணலாம்.
தேசிய நெடுஞ்சாலை எண் 47-ல் சென்னையிலிருந்து தாம்பரம் நோக்கி செல்கையில், சென்னை விமான நிலையத்தைக் கடந்தபின், பல்லாவரம்
என்று அழைக்கப்படும் பல்லவபுரம் பேருந்து நிலையத்தையும் கடந்து சென்றால், 'பாண்ட்ஸ்' தொழிற்சாலை அமைந்துள்ளது. இதன் எதிரே
வலப்புறம் திரும்பி செல்லும் பாதையில் சுமார் 6.5 கிலோமீட்டர்கள் திருநீர்மலை கோயிலைக் கடந்து பயணித்தால், சிட்கோ தோல் வளாகம்
அருமே அமைந்துள்ள தம்ம சேது மையத்தைச் சென்று அடையலாம்.
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு எதிர்புறம் உள்ள பூங்கா உள்ளூர் இரயில் நிலையத்திலிருந்து
தாம்பரம் செல்லும் இரயிலில் ஏறி, பல்லாவரம் இரயில் நிலையைத்தில் இறங்கவும். அங்கிருந்து பல்லாவரம்
பேருந்து நிலையத்திற்கு செல்லவும்.
பல்லாவரத்திலிருந்து தடம் எண் 55A கொண்ட பேருந்தில் ஏறி சிட்கோ
நிறுத்தத்தில் இறங்கினால், ஐந்து நிமிட நடை தூரத்தில் மையம் அமைந்துள்ளது. மையத்தை உள்ளூர்காரர்கள் சிலர் 'புத்தர் கோயில்' என்று
அழைப்பதுண்டு. சில நடத்துனர்கள் மையத்திற்கு இன்னும் அருகிலேயும் பேருந்தை நிறுத்த சம்மதிக்கக்கூடும்.
தாங்கள் விரும்பினால், ஆட்டோவிலும் செல்லலாம். பல்லாவரத்திலிருந்து மையத்தை அடைய ஆட்டோ
கட்டணம் சுமார் 200 ரூபாய்கள் ஆகும்.
மேலே செல்க
சென்னை தட்பவெப்பநிலை
சென்னையில் ஆண்டுமுழுவதும் பெரும்பாலும் வெப்பமான சீதோஷ்ண நிலையே நிலவுகிறது. மே மாதத்தின் முடிவிலும், ஜூன் மாதத்தின்
ஆரம்பத்திலும் வெப்பம் மிக அதிகமாக, அதாவது அதிகபட்சம் 38 முதல் 42 டிகிரி சென்டிகிரேடு அளவைத் தொடக்கூடிய அளவில், இருக்கும்.
ஜனவரி மாதமே சென்னையில் வெப்பம் மிகக் குறைவான மாதம். இம்மாதத்தில் குறைந்தபட்ச வெப்பம் 19-20 டிகிரி அளவில் இருக்கும்.
வடகிழக்கு பருவமழை காலத்தில், அதாவது நடு-செப்டம்பரிலிருந்து நடு-டிசம்பர் வரை உள்ள காலத்திலேயே சென்னையில் பெரும்பாலும்
மழை பெய்கிறது. வங்காள விரிகுடாவில் ஏற்படும் புயல் காற்றினாலும் சென்னை அவ்வப்பொழுது பாதிக்கப்படுகிறது.
மேலே செல்க
பயிற்சி பெறுபவர்களுக்கு அளிக்கப்படுபவை
- தியான இருக்கைகள்
- படுக்கை விரிப்புகள்
- தலையணை உறைகள்
- கொசுவலை
மேலே செல்க
பயிற்சி பெறுபவர்கள் கொண்டுவரவேண்டியவை
- முகாம் நடைபெறும் நாட்களுக்குத் தேவையான அளவு வசதியான, அடக்கமான, தளர்ந்த உடைகள்
- துண்டுகள் மற்றும் தேவையான சுகாதாரப் பொருட்கள் மற்றும் நறுமணமற்ற ஒப்பனைப் பொருட்கள்
- பருவமழை காலங்களில் குடை அல்லது ரெயின்கோட்
- மெழுகுவர்த்திகள், கைவிளக்கு (டார்ச் லைட்)
மேலே செல்க
பயிற்சி பெறுபவர்கள் கொண்டுவரக்கூடாதவை
- இறுக்கமான, மிக மெல்லிய, வெளிப்படுத்தக்கூடிய அல்லது கவனத்தைக் கவரக்கூடிய உடைகளை மையத்தில் அணியக்கூடாது.
ஆண்-பெண் இருபாலரும் அடக்கமான உடைகளையே அணியவேண்டும்
- புத்தகங்கள், நாட்குறிப்பேடுகள், இதழ்கள், மற்ற படிப்பதற்கான அல்லது எழுதுவதற்கான பொருட்கள்
- செல்போன்கள், சிறு கம்ப்யூட்டர்கள் முதலியவை. இவை அலாரம் ஒலி எழுப்புவதற்காகவும் பயன்படுத்தக்கூடாது
- மின்னணு சாதனங்கள்
- இசைக்கருவிகள்
- சொந்த உணவுப்பொருட்கள் (கீழே 'உணவும் உடல்நிலையும்' பகுதியைக் காண்க)
- புகையிலை - எந்த வடிவத்திலும்
- மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மருந்துகள்
- நறுமணப் பொருட்கள்
- பூஜைப் பொருட்கள், மதச்சார்பான சாதனங்கள்
- ஆபரணங்கள் முதலிய தேவையற்ற விலை உயர்ந்த பொருட்கள்
மேலே செல்க
வருகை மற்றும் புறப்பாடு
பதிவு செய்துகொள்வதற்கும், இருப்பிடம் சென்று உடைமைகளை சரிபார்த்து வைத்துக் கொள்ளவும் நேரம் இருக்கும் வகையில்
முகாம் தொடங்கும் நாள் அன்று மதியம் 2 மணிக்கு மேல் 4 மணிக்கு உள்ளாக மையத்தை வந்து அடையவும். இதுவே முகாமை
தாமதம் இன்றி குறித்த காலத்தில் ஆரம்பிக்க உதவும். காலம் கடந்து வருபவர்கள் முகாம் நிர்வாகிகளுக்கு சிரமங்களை ஏற்படுத்தி
அனைவருக்கும் சரிவர ஏற்பாடுகள் செய்ய இயலாமல் போகச் செய்கிறார்கள். ஏதேனும் அவசரக் காரியங்களால் தாமதம்
ஏற்பட்டாலோ அல்லது வரமுடியாமல் போனாலோ தயவுசெய்து உடனுக்குடனே எங்களுக்குத் தெரிவியுங்கள்.
மாலை 6 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்படும். அதன் பின்னர் முகாமைக் குறித்த முன்னுரை வழங்கப்படும்.
இறுதி நாள் காலை 7 மணி வரை நீங்கள் முகாம் நடைபெறும் இடத்திலேயே தங்கவேண்டியிருக்கும். காலை 7 மணி அளவில்
முகாம் முடிவடைந்தாலும், அறைகளை சுத்தம் செய்துவிட்டுச் செல்ல சற்றே கால அவகாசம் இருக்கும்படி திட்டமிட்டுக்கொள்ளுங்கள். அடுத்த முகாமிற்கு மையத்தைத் தயார் செய்ய நாங்கள் உங்கள் உதவியையே நாடுகிறோம்.
முகாமில் சேர உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டபின் உங்கள் நிகழ்ச்சியில் ஏதும் மாறுதல் இருந்தால், தயவுசெய்து
உடனே எங்களுக்குத் தெரிவியுங்கள்.